மறைக்கவும் மறுக்கவும் செய்யப்பட்ட துயரங்களின் பதிவுகள்.
தமிழ்ஈழ மக்களுக்கு குரல் கொடுக்கும் பேராசிரியர் நடேசன், சிங்கள இராணுவத்தினரால் சீரழிக்கப்பட்ட புனிதவதி என்னும் சிறுமிக்கு உதவநினைகிறார்.
இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட புனிதவதிகும் அவளது தாயாற்கும் ரகசியமாக தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். புனிதவதி கர்ப்பமாகிறாள். தனது மனைவி, மருத்துவர் நண்பர் மற்றும் காவல்துறை நண்பர் ஆகியோரின் உதவியுடன் அவளுக்கு பிரசவம் ஆகும் வரை கவனிதுகொளிகிறார்.
புனிதவதி மூலம் சிங்கள இராணுவத்தினரின் அட்டூழியங்களை வெளிஉலகிற்கு தெரியபடுதுகிறார்.
விதி அவர்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடியது என்பது கதை.
படத்தின் மிகபெரிய பலம் புனிதவதியாக நடித்த நீலிகா, ஒளிபதிவு மற்றும் பின்னணி இசை.
நீலிகா: சந்தோசம், துக்கம், பயம், வலி, ஏக்கம், பரிவு, தோழமை என்றும் இந்த சிறுமி காட்டும் முகபாவங்கள் அனைத்தும் நம்மையும் அந்த சிறுமி போல் மாற்றிவிடுகிறது. அற்புதமான நடிப்பு.
சத்யராஜ், சங்கீத, சீமான், நாசர், லக்ஷ்மி போன்ற அனைத்து நடிகர்களின் பங்களிப்பு அருமை.
படம் பார்த்தவுடன் ஆயுதம் ஏந்தி போராட நினைக்கும் நாம் கண்ணீரை துடைத்தபடி தியேட்டர்யை விட்டு வெளியே வருவோம்.
விகடனிடம் எதிர்பார்ப்பது - 42 முதல் 46 வரை
குறிப்பு: - இது தான் என் முதல் திரைப்பட விமர்சனம்.


