Sunday, 18 December 2011

உச்சிதனை முகர்ந்தால் - விமர்சனம்

மறைக்கவும் மறுக்கவும்  செய்யப்பட்ட  துயரங்களின் பதிவுகள்.
தமிழ்ஈழ மக்களுக்கு குரல் கொடுக்கும் பேராசிரியர் நடேசன், சிங்கள இராணுவத்தினரால் சீரழிக்கப்பட்ட புனிதவதி என்னும் சிறுமிக்கு உதவநினைகிறார். 
இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட புனிதவதிகும் அவளது தாயாற்கும்  ரகசியமாக தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். புனிதவதி கர்ப்பமாகிறாள். தனது மனைவி, மருத்துவர் நண்பர் மற்றும் காவல்துறை நண்பர் ஆகியோரின் உதவியுடன் அவளுக்கு பிரசவம் ஆகும் வரை கவனிதுகொளிகிறார். 
புனிதவதி மூலம் சிங்கள இராணுவத்தினரின் அட்டூழியங்களை வெளிஉலகிற்கு தெரியபடுதுகிறார். 
விதி அவர்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடியது என்பது கதை. 

படத்தின் மிகபெரிய பலம் புனிதவதியாக நடித்த நீலிகா, ஒளிபதிவு மற்றும் பின்னணி இசை.

நீலிகா: சந்தோசம், துக்கம், பயம், வலி, ஏக்கம், பரிவு, தோழமை என்றும் இந்த சிறுமி காட்டும் முகபாவங்கள் அனைத்தும் நம்மையும் அந்த சிறுமி போல் மாற்றிவிடுகிறது. அற்புதமான நடிப்பு.  

சத்யராஜ், சங்கீத, சீமான், நாசர், லக்ஷ்மி போன்ற அனைத்து நடிகர்களின் பங்களிப்பு அருமை. 

படம் பார்த்தவுடன் ஆயுதம் ஏந்தி போராட நினைக்கும் நாம் கண்ணீரை துடைத்தபடி தியேட்டர்யை விட்டு வெளியே வருவோம். 


விகடனிடம் எதிர்பார்ப்பது - 42 முதல் 46 வரை 

குறிப்பு: - இது தான் என் முதல் திரைப்பட விமர்சனம். 

Monday, 14 November 2011

தாயும் மகனும்

விளையாட்டு பெண்ணாக இருந்தவள், இல்லறம் வழியாக தாய்மை அடைகிறாள். அப்போது அவளிடம் தியாக உணர்ச்சியும் அர்ப்பண உணர்ச்சியும் நிறைவு பெற்றிருக்கும். ஒரு துறவியின் மனோ நிலையைப் பெண்ணிடம் பார்க்கலாம்.

இயற்கையை 'பிரகிருதி' என்கிறது சாஸ்திரம். பிரகிருதி என்பது பெண்பால்.

தன்னிடம் அடைக்கலமாகும் அத்தனை ஜீவராசிகளையும் அரவணைத்துக்கொள்ளும் பாங்கு பெண்களிடம் உண்டு. அதே குணம் உள்ள பூமியையும் தாயாகவே பார்க்கிறோம். தாயுள்ளம், குழந்தைகளிடம் வேறுபாடு பார்க்காது.

'குபுத்ரோஜா யேதக்வசிதயிகுமாதானபவதி' என்கிறார் ஆதிசங்கரர்.

'கெட்ட பையன் இருக்க முடியும்; கெட்ட தாய் இருக்க முடியாது' என்பது பொருள்.            

Friday, 30 September 2011

அம்மாவுக்க
அந்த மலையின் உச்சியில் வெட்ட வெளியில் நமக்கான குழந்தையை நாம் பெற்றெடுக்க வேண்டும். அது வரையில் என்ன கருவறை வாசலை தேவதைகள் காவல் காப்பார்கள் 

                                                          --- வால்ட் விட்மனுக்கு அவனது காதலி